About

வாருங்கள், வாசகரே…

முகப்பேர் டைம்ஸ் இலவச வார இதழ் தங்களை அன்போடு வரவேற்கிறது.

முகப்பேரின் வெற்றிகரமான, ஜனரஞ்சகமான, மக்களின் அபிமானத்துக்குரிய இந்த இதழ், வர்த்தகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சுற்றுப்புறத்தில் நடக்கும் நிகழ்வுகள், செய்திகளை வழங்கி வரும் இந்த இதழில் அருகாமை நபர்கள் பற்றிய அறிமுகம், ஆன்மீக செய்திகள், இல்லத்தரசிகளுக்கேற்ற மருத்துவ குறிப்புகள் என அனைத்துமே கிடைப்பதால், இலவசமாக வரும் இந்த இதழை அள்ளி அணைத்துக் கொண்டுள்ளனர் முகப்பேர் மக்கள்.

சென்னையில், முகப்பேர் கிழக்கு, மேற்கு, நொளம்பூர், ஏரி ஸ்கீம், ரெட்டிப்பாளையம், முகப்பேர் எக்ஸ்டன்ஷன், மதுரவாயல் ஒரு பிரிவு, டி.ஏ.பி.சி., வி.ஜி.என். அவென்யூ, அக்ஷ்யா பிளாட்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் இதழ் முகப்பேர் டைம்ஸ் ஆகும்.

40 ஆயிரம் பிரதிகள் அச்சாகும் இவ்விதழ், முகப்பேரின் முதன்மை இதழாகத் திகழ்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘வளருங்கள்… வளருவோம்’ என்ற உயர் தத்துவத்துடன் முகப்பேர் டைம்ஸ் செய்து வரும் சேவையால், பல வர்த்தக நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை தொகுத்துத் தர ரசனை மிக்க தனிப்பிரிவு, விநியோகத்துக்கென துடிப்பான இளைஞர்களைக் கொண்ட தனிப்படை, கனிவான அணுகுமுறை ஆகியவற்றைக் கொண்டுள்ள முகப்பேர் டைம்ஸ், வாசகர்கள் மற்றும் வர்த்தகர்களின் அன்பான ஆதரவோடு 18-வது ஆண்டில் தனது சேவையைத் தொடர்கிறது.

– SP ANNAMALAI,

95000 98525

mtimeseditorial@gmail.com