கத்திரி வெயிலால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முகப்பேரில் மூன்று இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. முகப்பேர் கிழக்கு பேருந்து நிலையம், பன்னீர் நகர் மற்றும் முகப்பேர் மேற்கு விஜயா வங்கி அருகே என 3 இடங்களில் தண்ணீர் பந்தல்களை சமூக சேவகர் கே.வி.திலகர் திறந்து வைத்துள்ளார். தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில், ரோமியோ, ஞானராஜ், பாபா கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply